உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம்
உண்டென்று கண்டேனடா
நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று
உன் காதல் கொண்டேனடா
ஒலியில்லா இசையில், நனைக்காத மழையில்
உன்னோடு உன்னோடு நான் ஏன் ஆடினேன்?
வழியில்லா திசையில், ஒளியில்லா உலகில்
எங்கே போகிறேன்?
உயிரே உயிரே உனை நான் மறவேனே
உலகே உனை நான் பிரிந்தும் விலகேனே
கோள் மாறும், மீன் மாறும், வான் மாறும்
ஆனால் என் காதல் மாறாதடா
விண்மீனின் தூசெல்லாம் தீர்ந்தாலும் கூட
என் காதல் தீராதடா
நம் விதியோ நாளை இல்லை என்றது
இன்றிரவோ இன்னும் மிச்சம் உள்ளது
கையின் திரையில் ஓர் ரேகை நீ வரைய
தேகம் முழுதும் காதல் பாயுதே
உயிரே உயிரே உனை நான் மறவேனே
உலகே உனை நான் பிரிந்தும் விலகேனே
உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம்
உண்டென்று கண்டேனடா
நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்றே
உன் காதல் கொண்டேனடா